Wednesday, July 27, 2011

சரியான காமெடி


தினமும்
காலண்டரைக் கிழிக்கிறது
பெரிய விஷயமில்லை;
ஒவ்வொரு நாளும்
நாம் என்னத்தைக் கிழிச்சோம்கிறது தான்
பெரிய விஷயம்....


போஸ்ட் மாஸ்டரிடம்
"தபாலை"க் கேட்க முடியும்.....
ஹெட் மாஸ்டரிடம்
"தலை"யைக் கேட்க முடியுமா??????????

எப்படி பட்ட முட்டாளும்
பணத்தை சம்பாதித்து விடலாம்....
ஆனால்
அதை ஒரு புத்திசாலி
மட்டுமே சேமிக்க முடியும்!

குக்கர் விசிலடிச்சா
பஸ் போகாது;
கண்டக்டர் விசிலடிச்சா
சோறு வேகாது!

ஃபெயில் ஆனா
மறுபடி எக்ஸாம் எழுதி
பாஸ் ஆக முடியும்!
பாஸ் ஆகிட்டா
மறுபடி எக்ஸாம் எழுதி
ஃபெயில் ஆக முடியுமா?

மண்ணிலிருந்து
மண்னெண்ணெய்
எடுக்கலாம்;
கடலிலிருந்து
கடலெண்ணெய்
எடுக்க முடியுமா?

போலீஸ் ஸ்டேஷனுக்கு
போன் போட்டா
போலீஸ் வரும்;
ரயில்வே ஸ்டேஷனுக்கு
போன் போட்டா
ரயில் வருமா?

தண்ணியில கப்பல் போனா
ஜாலி;
கப்பல்ல தண்ணி போனா
காலி!

இலட்சியவாதி
அலட்சியங்களையும் மதிக்கிறான்;
அலட்சியவாதி
இலட்சியங்களையும் மிதிக்கிறான்.


பத்து எறும்பு சேர்ந்து
ஒரு யானையை
கடிக்க முடியும்;
ஆனா
பத்து யானை சேர்ந்து
ஒரு எறும்பை
கடிக்க முடியாது!


ஹோட்டலில்
காசு கொடுக்கலேனா
மாவாட்டச் சொல்லுவாங்க....
ஆனால்
பஸ்ல
காசு கொடுக்கலைன்னா
பஸ் ஓட்டச் சொல்லுவாங்களா?

காப்பி பொடியில்
காப்பி தயாரிக்கலாம்....
இட்லி பொடியில்
இட்லி தயாரிக்க முடியுமா?

ஈஸி சேர்ல உட்கார்ந்து
பரீட்சை எழுதினாலும்
சரியா படிக்கலைன்னா
பெயில்தான் ஆகனும்!

என்ன தான்
வாழை தார் போட்டாலும்
அதை வைத்துக்கொண்டு
ரோடு போட முடியுமா?

யானை மேல நாம உட்கார்ந்தா
சவாரி!
நம்ம மேல யானை உட்கார்ந்தா
ஒப்பாரி!

1 comment:

  1. காமெடி கூட ரொம்ப தூய தமிழ்ல தான் எழுதனும்னு அழிசாட்டியம் பண்ணாதிங்க ......:)

    ReplyDelete