Saturday, September 10, 2011

அஜித் குமார் விருதுகள்


அஜித் குமார் தாம் நடித்த முதல் தெலுங்கு படத்திற்காக (பிரேம புஸ்தகம்) பரத்முனி ஆர்ட் அகாடமியின் சிறந்த புதுமுக நடிகருக்கான விருதைப் பெற்றுள்ளார். 


1999 ஆம் ஆண்டு அஜித் குமார் வாலி படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது, சினிமா எக்ஸ்பிரஸ் விருது மற்றும் தினகரன்
சினிமா விருதைப் பெற்றுள்ளார்.

2000ஆம் ஆண்டு முகவரி படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான சினிமா எக்ஸ்பிரஸ் விருதைப் பெற்றுள்ளார். 2001 ஆம் ஆண்டு சிறப்பு நடிகருக் கான மாநில விருதை பூவெல்லாம் உன் வாசம் படத்திற்காக வென்றுள்ளார்.

2002ஆம் வருடம் வில்லன் படத்திற்காக சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது மற்றும்தினகரன் சினிமா விருதைப் பெற்றுள்ளார்.தென் இந்திய சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருதை இருமுறைப் பெற்றுள்ளார்.

கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்திற்காக சிறந்ததுணை நடிகருக்கா னபிலிம்பேர் விருதைப் பெற்றுள்ளார்.

No comments:

Post a Comment