ஆவணி மாதம் வளர்பிறை வெள்ளிக்கிழமையில், பெண்கள் வரலட்சுமி விரதம் இருக்கிறார்கள். ஆர்வம் இருந்தால் யார் வேண்டுமானாலும் இதை செய்யலாம்.
வீட்டின் தென்கிழக்கு மூலையில் ஒரு சிறு மண்டபத்தை எழுப்பவேண்டும். அதில் வெள்ளியால் செய்யப்பட்ட வரலட்சுமி முகத்தை, தாழம்பூ சூட்டி ஒரு பலகையில் வைக்க வேண்டும். முகத்திற்கு முன் வாழை இலை போட்டு அதில் ஒரு படி பச்சரிசியை பரப்ப வேண்டும். அரிசியின் மீது தேங்காய், மாவிலை, எலுமிச்சை, பழங்கள், தங்கக்காசுகள் (முடியாவிட்டால் மஞ்சள் செவ்வந்தி) வைத்து சிலைக்கு புதிய மஞ்சள் நிற ஆடை அணிவிக்க வேண்டும். ஒரு கும்பத்தில் சந்தனம் குங்குமம் இட வேண்டும். கும்பத்தின் மேல் மாவிலையுடன் தேங்காய் வைத்து அரிசியின் நடுவில் வைக்க வேண்டும். பின்பு ஐந்து வகை ஆரத்தி (மங்கள ஆரத்தி (மஞ்சள்), ஸ்ருங்கார ஆரத்தி (அலங்காரம்), ராஜபோக ஆரத்தி (நிவேதனங்கள்), சந்த்யா (சாயங்கால ஆரத்தி), சயனம் (தாலாட்டு) ஆகிய பூஜைகள் செய்ய வேண்டும்.
கும்ப பூஜை முடிந்தபிறகு கணேச பூஜை செய்ய வேண்டும். பூஜை செய்யும் போது அஷ்டலட்சுமி ஸ்தோத்திரம், கனகதாரா ஸ்தோத்திரம், மகாலட்சுமி ஸ்தோத்திரம் ஆகியவற்றை படிக்கலாம் அல்லது ஒலிக்கச் செய்யலாம். அஷ்டலட்சுமிகளுக்கும் விருப்பமான அருகம்புல்லை சிலையின் மீது தூவி பூஜை செய்வது நல்லது. வீட்டிற்கு வந்திருக்கும் பெண்களுக்கு தேங்காய், மஞ்சள்கயிறு, குங்குமம் ஆகியவற்றை கொடுக்க வேண்டும். மஞ்சள் கயிறை வலதுகையில் கட்டவேண்டும். நைவேத்யமாக அம்மனுக்கு கொழுக் கட்டை படைக்கலாம். பூஜைக்குப் பின்பு கலசத்தை அரிசி பானையில் வைத்துவிட வேண்டும். இதனால் அன்னபூரணியின் அருள் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
பத்மாஸநே பத்மகரே
சர்வலோகைக பூஜி்தே
நாராயணப்ரியே தேவி
ஸூப்ரிதாப்பவ ஸர்ப்பதா
பின்னர் 9 இழைகளும், 9 முடிச்சுகளும் கொண்ட "தோரம்" என்ற நோன்புக் கயிறை வலது கையில் கட்டி, லட்சுமிக்கு நைவேத்யம் செய்து கும்பத்தை வலம் வந்து நமஸ்கரிப்பர்.
===
முன்பே தயார் செய்து கொள்ள வேண்டியவை:
மஞ்சள்
கும்குமம்
சந்தனம்
அக்ஷதை
வெற்றிலை பாக்கு
வாழைப்பழம் - 12
தேங்காய் - 6
மாவிலை, தோரணம்
வாழை கன்று - 2
அம்மனுக்கு பஞ்சு மாலை
தாமரை - 6
தாழம்பூ - 2
உதிரிப்பூ - கொஞ்சம்
பூமாலை - 2
தொடுத்த சரம் - 3 முழம்
பச்சரிசி - 4 கப்
தாம்பாளம்
அம்மன் முகம்
கலச சொம்பு
பஞ்சபாத்திரம் உத்தரணி
பூஜை மணி
கற்பூரத் தட்டு
தூபக்கால்
தீபக்கால்
பித்தளை கிண்ணங்கள்
பித்தளை தட்டுக்கள்
ஆரத்தி தட்டு
ஊதுவத்தி
சாம்பிராணி
அட்சதை
கற்பூரம்
பலகை
மஞ்சள் வண்ண பட்டு துணி
முழு பாக்கு
மஞ்சள் கிழங்கு
வெள்ளி காசுகள்
எலுமிச்சை
கருகமணி காதோலை
மஞ்சள் சரடுகள்
நைவேத்யம்
குறைந்தது ஐந்து முதல் ஒன்பது எண்ணிக்கையில்
பூரண கொழக்கட்டை
உளுத்தம் கொழக்கட்டை
எள்ளு கொழக்கட்டை
உளுந்து வடை
பச்சரிசி இட்லி
வெல்ல பாயசம்
ஒரு ஸ்பூன் பருப்பு, நெய் சேர்த்த அன்னம் (மகா நெய்வேத்தியம்)
அப்பம்
சர்க்கரை பொங்கல்
வடை
தயிர்
பசும்பால்
நெய்
தேன்
கற்கண்டு.
வசதிக்கு ஏற்றபடி சில பழங்கள்
========
நோம்புக்கு முதல் நாள், எண்ணெய் தேய்த்துக் குளித்து, பச்சரிசியை ஊறவைத்து நிழல் உலர்த்தளாக உலர்த்தி, ஈர அரிசியாக அரைத்துக்கொள்ள வேண்டும்.
இதே மாவில் இரண்டு கரண்டி எடுத்துக் கொண்டு, ஒரு கரண்டி உளுந்து அரைத்து சேர்த்து பச்சரிசி இட்லிக்கும் வைத்துக் கொள்ளலாம்.
கிழக்கு திசை நோக்கி பூஜை மண்டபம் அமைக்க வேண்டும். பூஜை மண்டபத்தில் மாக்கோலம் போட்டு, கலசம் வைத்து அலங்காரம் செய்து வைத்துக் கொள்ளலாம்.
முதல் நாள் இரவு கலசம் அமைக்க:
அம்மன் முகத்தையும், விளக்குகள் மற்றும் பூஜை பாத்திரங்களையும் நன்றாக தேய்த்து அலம்பி வைத்துக் கொள்ளுங்கள்.
அம்மனை அழைக்க வாசல் படியருகில் செம்மண் இட்ட கோலம் போட்டு பலகை வைத்துக் கொள்ள வேண்டும். அதன் மேல் பலகை வைத்து, பலகையில் கோலம் போட்டு மண்டபத்தில் வைத்து, அதன் மேல் தாம்பாளத்தை வைத்து, தாம்பாளத்தில் கொஞ்சம் பச்சரிசியை பரத்தி வையுங்கள். கலச சொம்புக்கு சந்தன குங்குமம் இட்டு, பாதிக்கும் மேல் பச்சரிசி நிரப்பி, அதற்குள் இரண்டு வெற்றிலை இரண்டு பாக்கு, இரண்டு மஞ்சள் கிழங்கு, வெள்ளி காசு, ஒரு எலுமிச்சை, கருகமணி காதோலை ஆகியவற்றை இட்டு வையுங்கள். தேங்காய்க்கு மஞ்சள் தடவி குங்குமம் வைத்து, மாவிலையை கலச சொம்பில் அமைத்து சொம்பின் மேல் குடுமி மேல் பக்கம் இருக்குமாறு தேங்காயை வையுங்கள். அம்மன் முகத்தை அலங்காரம் செய்து கலசத் தேங்காய் மேல் பொருத்துங்கள். அம்மனுக்கு விதவிதமாய் அலங்கார பொருட்கள், நகைகள் ரெடிமேடாக கிடைகின்றன. அவரவர் ஆசைக்கும் வசதிக்கும் ஏற்றவாறு அமைத்துக் கொள்ளலாம். மஞ்சள் பட்டுத் துணி சாற்றி வையுங்கள். இந்த சொம்பை அரிசி பரத்திய தாம்பாளத்தின் மேல் வைக்க வேண்டும். தாமரை / பூமாலை / தாழம்பூவையும் அம்மனுக்கு இருபுறமும் சாற்றி வைக்க வேண்டும். விளக்கேற்றி வைக்க வேண்டும். இது வாசல் படியருகில் அமைத்திருக்க வேண்டும்.
அன்றிரவு வெண்பொங்கல், சாம்பார் மற்றும் பாயசம் சமைத்து நெய்வேத்தியம் செய்து உண்ண வேண்டும்.
மறுநாள் காலை (விரதத்தன்று): மறுநாள் காலை எண்ணெய் தேய்த்துக் குளித்து ஒன்பது கஜம் மடிசார் கட்டிக் கொள்ள வேண்டும். வாசல்படியருகில் அமர்த்தி இருக்கும் அம்மனை சுலோகங்கள் சொல்லி, வெற்றிலை பாக்கு பழம் நெய்வேத்தியங்கள் செய்து, தேங்காய் உடைத்து, தீப, தூப கற்பூர நீராஞ்சனம் செய்து "வரலக்ஷ்மி ராவே மா இன்டிக்கி" "பாக்யாத லக்ஷ்மி பாரம்மா" பாட்டை பாடி அழைத்து வந்து மண்டபத்தில் அமர்த்த வேண்டும்.
பூஜை:
ஆசமனம்:
உத்தரணியில் தீர்த்தம் எடுத்து, வலது உள்ளங்கையில் விட்டுக் கொண்டு,
ஓம் அச்சுதாய நம:
ஓம் அனந்தாய நம:
ஓம் கோவிந்தாய நம:
என்று சொல்லி, மூன்றுமுறை உட்கொள்ள வேண்டும்.
விக்னேஸ்வர பூஜை:
மஞ்சள் பிள்ளையார் கூம்பு வடிவத்தில் பிடித்து வைத்து சந்தன குங்கும அக்ஷதைகள் சேர்த்து ஒரு சின்ன பித்தளை தட்டில் வைத்துக் கொள்ளவும்.
பஞ்சுத் திரி நெய் கொண்டு ஐந்து முக விளக்கொன்றை ஏற்றி
சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்புஜம்
ப்ரசன்னவதனம் த்யாயேத் சர்வவிக்னோ (உ)ப சாந்தயே
என்று ஜபித்து, வலது தொடை மீது வலது கை வைத்து இடது கையால் வலது கையை மூடிக்கொண்டு சங்கல்பம் செய்து கொள்ளவும்.
மமோபாத்த சமஸ்த துரிதக்ஷயத்வாரா ஸ்ரீ பரமேஸ்வர
ப்ரீத்யர்த்தம் ததேவலக்னம் சுதினம் ததேவ தாராபலம் சந்திரபலம் ததேவ
வித்யாபலம் தெய்வபலம் ததேவ
த்யானம்:
கணானாம் த்வாம் கணபதிம் ஹவாமஹே
கவிம் கவீனாம் உபமஸ்ர வஸ்தமம்
ஜ்யேஷ்ட ராஜம் பிராமணாம் பிரமணஸ்பத ஆனஹ
ஸ்ருன்வன்னோதிப்ஹிஸ்சீத சாதனம்
ஆவஹனம்
இஷ்டதெய்வத்தை மனதில் த்யானித்துக் கொண்டு, பூ அக்ஷதை சமர்ப்பணம் செய்து, மஞ்சள் பிள்ளையாருக்கு பூஜிக்கவும்.
அஸ்மின் பிம்பே ஸ்ரீ மஹாகணபதிம் ஆவாஹயாமி
ஓம் ஸ்ரீ மஹாகணபதயே நம: ஆசனம் சமர்ப்பயாமி (பூ போடவும்)
ஓம் ஸ்ரீ மஹாகணபதயே நம: அர்க்யம் சமர்ப்பயாமி (உத்தரணி ஜலம் எடுத்து ஒரு கிண்ணத்தில் சேர்க்கவும்)
ஓம் ஸ்ரீ மஹாகணபதயே நம: ஆசமநீயம் சமர்ப்பயாமி (உத்தரணி ஜலம் எடுத்து ஒரு கிண்ணத்தில் சேர்க்கவும்)
ஓம் ஸ்ரீ மஹாகணபதயே நம: மதுபர்க்கம் சமர்ப்பயாமி (உத்தரணி ஜலம் எடுத்து ஒரு கிண்ணத்தில் சேர்க்கவும்)
ஓம் ஸ்ரீ மஹாகணபதயே நம: ஸ்நானம் சமர்ப்பயாமி (உத்தரணி ஜலம் எடுத்து ஒரு கிண்ணத்தில் சேர்க்கவும்)
ஓம் ஸ்ரீ மஹாகணபதயே நம: ஸ்நானாநந்தரம் ஆசமநீயம் சமர்ப்பயாமி (உத்தரணி ஜலம் எடுத்து ஒரு கிண்ணத்தில் சேர்க்கவும்)
ஓம் ஸ்ரீ மஹாகணபதயே நம: வஸ்த்ரம் சமர்ப்பயாமி (பூ அக்ஷதை சேர்க்கவும்)
ஓம் ஸ்ரீ மஹாகணபதயே நம: உபவீதம் சமர்ப்பயாமி (பூ அக்ஷதை சேர்க்கவும்)
ஓம் ஸ்ரீ மஹாகணபதயே நம: ஆபரணம் சமர்ப்பயாமி ( (பூ அக்ஷதை சேர்க்கவும்)
ஓம் ஸ்ரீ மஹாகணபதயே நம: கந்தான் தாரயாமி (சந்தனம் இடவும்)
ஓம் ஸ்ரீ மஹாகணபதயே நம: கந்தஸ்யோபரி ஹரித்ரா குங்குமம் சமர்ப்பயாமி (குங்குமம் இடவும்)
ஓம் ஸ்ரீ மஹாகணபதயே நம: புஷ்பை பூஜயாமி ( (பூ அக்ஷதை சேர்க்கவும்)
புஷ்பத்தால் அர்ச்சனை செய்யவும்.
ஓம் சுமுகாய நம:
ஓம் ஏகதந்தாய நம:
ஓம் கபிலாய நம:
ஓம் கஜகர்ணகாய நம:
ஓம் லம்போதராய நம:
ஓம் விகடாய நம:
ஓம் விக்னராஜாய நம:
ஓம் விநாயகாய நம:
ஓம் கணாதிபாய நம:
ஓம் தூமகேதவே நம:
ஓம் கணாத்யக்ஷாய நம:
ஓம் பாலச்சந்த்ராய நம:
ஓம் கஜானனாய நம:
ஓம் வக்ரதுண்டாய நம:
ஓம் சூர்பகர்னாய நம:
ஓம் ஹேரம்பாய நம:
ஓம் ஸ்கந்தபூர்வஜாய நம:
ஓம் சித்திவினாயகாய நம:
ஓம் ஸ்ரீ மகாகணபதயே நம:
உத்தர பூஜை
தூபம்: ஊதுவத்தி காண்பித்து : தூபம் ஆக்ஹ்ராபயாமி
தீபம்: நெய் ஜோதி விளக்கு காண்பித்து: தீபம் சந்தர்ஷயாமி
உத்தரணி ஜலம் எடுத்து கிண்ணத்தில் சேர்த்து : தீபானந்தரம் ஆசமநீயம் சமர்பயாமி
நைவேத்யம்: தேங்காய் பழங்கள் மீது தண்ணீர் தெளித்து:
ஓம் பூர்புவஸ்ஸுவ: அம்ர்தோபஸ்தரனாமஸி, பிராணாய: ஸ்வாஹா, அபானாய ஸ்வாஹா, வ்யானாய ஸ்வாஹா, உதானாய ஸ்வாஹா, சமானாய ஸ்வாஹா, பிரம்மனே ஸ்வாஹா, நைவேத்யம் நிவேதயாமி, நைவேத்யானன்தரம் ஆசமநீயம் சமர்பயாமி
தாம்பூலம் சமர்பித்து:
தாம்பூலம் சமர்பயாமி
கற்பூர நீராஞ்சனம்: கற்பூர நீராஞ்சனம் சமர்பயாமி
உத்தரணி ஜலம் எடுத்து கிண்ணத்தில் சேர்த்து : கற்பூர நீராஜனனந்தரம் ஆசமநீயம் சமர்பயாமி
வந்தனம்: மந்த்ரபுஷ்பம் சமர்பயாமி
ஆத்ம பிரதக்ஷிணம்
(தன்னையே பிரதக்ஷிணம் செய்து கொண்டு)
யானி கானிச்ச பாபானி ஜன்மாந்தர க்ரிதானிச தானி தானி வினஸ் யந்தி
பிரதக்ஷின பதே பதே
பிரார்த்தனை:
நமஸ்காரம் செய்து:
நமோ நமோ கணேசாய நமஸ்தே விஸ்வ ரூபிணே
நிர்விக்னம் குருமே காமம் நமாமி த்வாம் கஜானன
அகஜானன பத்மார்க்கம் கஜானனம் அஹர்னிசம்
அநேக தந்தம் பக்தாநாம் ஏகதந்தம் உபாஸ்மஹே
விநாயக வரம் தேஹி மகாத்மான் மோதகப்ரிய
அவிக்னம் குருமே தேவ சர்வ கார்யேஷு சர்வதா
வக்ரதுண்ட மஹாகாய சூர்யகோடி சமப்ரபா
நிர்விக்னம் குருமே தேவா சர்வகார்யேஷு சர்வதா
ப்ரதக்ஷிண நமஸ்காரான் சமர்பயாமி
பின், எல்லாக் காரியங்களிலும் எப்போதும் இடையூறுகள் இல்லாமல் செய்தருள வேண்டும் என்று
விக்னேஸ்வரரை பிரார்த்திக்க வேண்டும்.
வக்ர துண்ட மஹாகாய சூர்ய கோடி ஸமப்ரப
நிர்விக்னம் குரு மே தேவ ஸர்வ கார்யேஷு ஸர்வதா
என்று சொல்லி பிரார்த்தித்து நமஸ்காரம் செய்துவிட்டு, சங்கல்பம் செய்யவும்.
இந்த வருடம் ஆக.12, 2011 வெள்ளிக்கிழமை வருவதால், அந்த நாளுக்கு உரியதை இங்கே தருகிறேன். வருஷ நாமம் - கர ; அயனம் - தக்ஷிணாயனம்; ருதௌ - க்ரீஷ்ம ருதௌ ; மாசம் - கடக மாசம்; பக்ஷம் - சுக்ல பக்ஷம் ; திதி - சதுர்த்தசி ; வாஸரம் - ப்ருகு வாஸரம் ; நக்ஷத்திரம் -பகல் வரை உத்ராட நக்ஷத்ரம்; அதற்கு மேல் மாலை நேரம் என்றால், திருவோணம் நக்ஷத்ரம்
வரலக்ஷ்மி பூஜை:
பிள்ளையாரை த்யானம் பண்ணிக்கொண்டு:
சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்புஜம்
ப்ரசன்னவதனம் த்யாயேத் சர்வவிக்னோ (உ)ப சாந்தயே
சங்கல்பம்:
வலது கையில் கொஞ்சம் அக்ஷதையை எடுத்து இடது கையால் மூடிக் கொண்டு வலது தொடை மேல் வைத்துக் கொண்டு:
மமோபாத்த சமஸ்த துரிதக்ஷயத்வாரா ஸ்ரீ பரமேஸ்வர
ப்ரீத்யர்த்தம்
சுபே சோபனே முகூர்த்தே(அ)த்ய ப்ரம்மன த்விதீய பரார்த்தே
ஸ்வேத வராஹ கல்பே, வைவஸ்வத மன்வந்தரே, அஷ்டாவிம்சதிதமே கலியுகே, பரதமே பாதே,
ஜம்பூத்வீபே, பாரத வர்ஷே, பாரத கண்டே மேரோ: தக்ஷிணே பார்ஸ்வே, சகாப்தே, அஸ்மின் வர்தமானே வ்யாவஹாரிகே பிரபவாதி ஷஷ்டி சம்வத்சரானாம்
மத்யே கர (2011) [வருஷம் பெயர்] நாம சம்வத்சரே, தக்ஷினாயனே, கிரீஷ்ம ரிதௌ [மாசம்] கடகம் (ஆடி) மாசே சுக்ல பக்ஷே சதுர்தசி சுபதிதௌ பிருகு வாசர யுக்தாயாம் உத்திராட நக்ஷத்திர யுக்தாயாம் சுபயோக சுபகரண
ஸகல விசேஷண விசிஷ்டாயாம் அஸ்யாம் சுப திதௌ
மமோபாத்த ஸமஸ்த துரித க்ஷயத்வாரா ஸ்ரீ பரமேச்வர ப்ரீத்யர்த்தம், அஸ்மாகம் ஸஹகுடும்பானாம்,
க்ஷேம ஸ்தைர்ய வீர்ய விஜய ஆயுராரோக்ய ஐச்வர்ய அபிவ்ருத்யர்த்தம், ஸமஸ்த துரிதோப
சாந்த்யர்த்தம், தர்மாத்மா காம மோக்ஷ சதுர்வித ஃபல புருஷார்த்த சித்த்யர்தம், உசிதகாலே ஆயுஷ்மத்ஸுரூப சுகுணபுத்ர அவாப்த்யர்த்தம், தீர்க்க ஸௌமாங்கல்ய அவாப்த்யர்த்தம், அரோக திடகாத்ரதா ஸித்யர்த்தம், சிந்தித மனோரத அப்த்யர்தம், மனோ வாஞ்சிதசகல அபீஷ்ட ஃபல சித்த்யார்தம், ஸ்ரீ வரலக்ஷ்மி ப்ரஸாத ஸித்த்யர்த்தம், யாவச்சக்தி த்யான-ஆவாஹனாதி சமஸ்த ஷோடச உபசாரை: ஸ்ரீ வரலக்ஷ்மி பூஜாம் கரிஷ்யே
சங்கல்பம் செய்து கொண்டு புஷ்பம் அக்ஷதைகளை வடக்கு நோக்கி தரையில் சேர்த்து கைகளை சுத்தி செய்துகொள்ளவும்.
விக்னேஸ்வர யதாஸ்தானம்:
கையில் சிறிது தண்ணீர் எடுத்து துடைத்துக் கொண்டு,
அப உபஷ்ப்ருஷ்ய:
அக்ஷதையை மஞ்சள் பிள்ளையார் மேல் சேர்த்து வடக்கு நோக்கி நகர்த்தவும்
விக்னேச்வரம் யதாஸ்தானம் பிரதிஷ்டாபயாமி
(விநாயகரை யதாஸ்தானம் செய்து)
(மணி அடிக்கவும்) ஆகமார்த்தம்து தேவானாம்கமனார்த்தம் துரக்ஷ ஸாம்
குருகண்டாரவம் தத்ரதேவதாஹ்வான லாஞ்சனம்
கலச பூஜை:
பஞ்ச பாத்திரத்தில் தண்ணீர் எடுத்துக் கொண்டு, புஷ்பம் பூ அக்ஷதைகளை கையில் வைத்துக் கொண்டு பஞ்சபாத்திரத்தை மூடியபடி ஜபிக்கவும்.
கலஸ்ய முகே விஷ்ணு கண்டே ருத்ர சமாஸ்ரிதா:
மூலே தாத்ரா ஸ்திதோ பிரம்மா மத்யே மாத்ருகனாஸ்ம்ருத
குக்ஷௌ து சாகரா: சர்வே சப்தத்வீபா வசுந்தரா
ருக்வேதோ(அ)தா யஜுர்வேத: சாமவேதோ(அ)யதார்வன:
கங்கே ச யமுனே சைவ கோதாவரி சரஸ்வதி
நர்மதே சிந்து காவேரி ஜலே(அ)ஸ்மின் சந்நிதிம் குரு
(என்று தீர்த்தத்தை ப்ரோக்ஷிக்கவும்)
பூஜாத்ரவ்யங்களுக்கும் பூஜை செய்கின்றவரும் ப்ரோக்ஷித்துக் கொள்ளவும்.
அங்கைஷ்ச்ச சாஹிதா: சர்வே கலசாம்பு சமாஸ்ரிதா:
ஆயாந்து தேவ பூஜார்தம் துரிதக்ஷய காரகா:
என்று, புஷ்பார்ச்சனை செய்யவும்.
கங்காயை நம:
யமுனாயை நம:
கோதாவர்யை நம:
ஸரஸ்வத்யை நம:
நர்மதாயை நம:
ஸிந்தவே நம:
காவேர்யை நம:
தாம்ரவர்ண்யை நம:
- என்று பூஜித்து, தீர்த்தத்தை, பூஜைப் பொருள்கள், கும்பம் மற்றும் தங்கள் மீது தெளிக்கவும்.
கண்ட பூஜை:
(மணி அடிக்கவும்) ஆகமார்த்தம்து தேவானாம்கமனார்த்தம் துரக்ஷ ஸாம்
குருகண்டாரவம் தத்ரதேவதாஹ்வான லாஞ்சனம்
தியானம் மற்றும் ஆவாஹனம்:
குருர் ப்ரஹ்மா குருர் விஷ்ணுர் குருர் தேவோ மஹேச்வர:|
குருஸ்ஸாக்ஷாத் பரம்ப்ரஹ்ம தஸ்மை ஸ்ரீகுரவே நம:||
என்று, குருவை தியானித்த பிறகு, ப்ராணப்ரதிஷ்டை செய்யவும்.
ஆவாஹனம்:
சர்வமங்கள மாங்கல்யே விஷ்ணு வக்ஷச்தலாலயே
ஆவாஹயாமி தேவீத்வாம் அபீஷ்ட பலதா பவா
அஸ்மின் கலச வரலக்ஷ்மீம் ஆவாஹயாமி
சமஸ்த உபசார மந்த்ரா:
அஸ்ய ஸ்ரீ வரலக்ஷ்மி ப்ராணப்ரதிஷ்டா மஹாமந்த்ரஸ்ய,
ப்ரம்ம-விஷ்ணு -மஹேச்வரா ருஷய: (வலது கையை தலை உச்சியில் வைக்கவும்)
ருக் யஜூஸ் ஸாம அதர்வாணிச் சந்தாம்ஸி (கையால் மூக்கு நுனியில் தொடவும்)
ஸகல ஜகத் ஸ்ருஷ்டி ஸ்திதி ஸம்ஹார காரிணீ ப்ராணா சக்தி: பரா தேவதா (ஹ்ருதயத்தில் தொடவும்)
ஆம்-பீஜம், ஹ்ரீம்-சக்தி:, க்ரோம்-கீலகம்
தியானித்து, புஷ்பம் அட்சதையை தீர்த்தத்துடன் பின்வரும் மந்திரம் சொல்லி, கும்பத்திலுள்ள லக்ஷ்மி பிம்பத்தில் சேர்க்கவும்.
ஆவாஹிதோ பவ
ஸ்தாபிதோ பவ
ஸந்நிஹிதோ பவ
ஸந்நிருத்தோ பவ
அவகுண்டிதோ பவ
ஸுப்ரீதோ பவ
ஸுப்ரஸன்னோ பவ
ஸுமுகோ பவ
வரதோ பவ
ப்ரஸீத ப்ரஸீத
தேவி ஸர்வ ஜகன்நாயிகே யாவத் பூஜாவஸானகம்
தாவத் த்வம் ப்ரீதி-பாவேன பிம்பே அஸ்மின் ஸந்நிதிம் குரு
கும்பத்தில் வரலக்ஷ்மியை தியானிக்கவும்.
பத்மாஸனாம் பத்மகராம் பத்மமாலா விபூஷிதாம்
க்ஷீர ஸாகர ஸம்பூதாம் க்ஷீரவர்ண ஸமப்ரபாம்
க்ஷீரவர்ணஸமம் வஸ்த்ரம் ததானாம் ஹரிவல்லபாம்
பாவயே பக்தி யோகேன கலசே அஸ்மின் மனோஹரே
வரலக்ஷ்ம்யை நம:
இப்படி ப்ராணப்ரதிஷ்டை செய்து, புஷ்பம் அட்சதை, தீர்த்தம் விட்டு, பால் பழம் நிவேதித்து, வரலக்ஷ்மி பூஜையைத் தொடங்கவும்.
த்யான மந்திரம்:
லக்ஷ்மீம் க்ஷீரஸமுத்ர ராஜ தநயாம் ஸ்ரீரங்க தாமேஸ்வரீம் |
தாஸீபூத ஸமஸ்த தேவ வநிதாம் லோகைக தீபாங்குராம் ||
ஸ்ரீமந்மந்த கடாக்ஷலப்த விபவ பிரம்மமேந்த்ர கங்காதராம் | 16
த்வாம் த்ரைலோக்ய குடும்பிநீம் ஸரஸிஜாம் வந்தே முகுந்தப்ரியாம் ||
மாதர்நமாமி கமலே கமலாயதாக்ஷீ ஸ்ரீவிஷ்ணு ஹ்ருத்கமலவாஸினி விஸ்வமாத:| 17
க்ஷீரோதஜே கமல கோமல கர்பகெளரி லக்ஷ்மீ :ப்ரஸீத சததம் நமதாம் ஸரண்யே ||
யா சா பத்மாசனஸ்தா விபுலகடிதடீ பத்ம பத்ராய தாக்ஷி
கம்பீரா வர்தனாபி: ஸ்தனபார நாபிதா சுப்ர வஸ்தோத்தரீயா
லக்ஷ்மீர் திவ்யை கஜேந்த்ரை: மணிகன கசிதை: ஸ்நாபிதா ஹேமகும்பை:
நித்யம் சா பத்மஹஸ்தா மம வசது க்ருஹி சர்வமாங்கல்ய யுக்தா
பத்மாசனாம் பத்மகராம் பத்மமாலா விபூதிஹாம்
க்ஷீரவர்ணசமம் வஸ்த்ரம்ததானாம் ஹரிவல்லபாம்
பாவயே பக்தியோகேன கலஷே(அ)ஸ்மின் மனோஹரே
அஸ்மின் கலச வரலக்ஷ்மீம் த்யாயாமி
பாலபானு ப்ரதீகாசே பூர்ணசந்திரா நிபானனே
சூத்ரேஸ்மின் சுஸ்திதா பூத்வா ப்ரயச்ச பஹுலான் வரான்
தோரம் ஸ்தாபயாமி
அஷ்ட லட்சுமிகளுடன் வரலட்சுமியையும் சேர்த்து ஒன்பது லட்சுமிகள் என்று சாஸ்திரம் சொல்கிறது. எனவே, ஒன்பது நூல் இழைகளால் ஆன, ஒன்பது முடிச்சுகள் போடப்பட்ட நோன்புக் கயிறை (சரடை) பூஜையில் வைக்க வேண்டும். சரட்டில் புஷ்பம் கட்டி கலசத்துக்கு அருகில் வைக்கவும்.
ஆசனம்:புஷ்ப அக்ஷதை கலசத்தில் சேர்க்கவும்.
அநேகரத் நகசிதம் முக்தாஹாரைர் விபூஷிதம்
ஸூவர்ண ஸிம்மாஸனம் சாரு ப்ரீத்யர்த்தம் ப்ரதிக்ருஹ்யதாம்
ஸ்ரீ வரலக்ஷ்ம்யை நம: ஆஸனம் ஸமர்ப்பயாமி
பாத்யம்: கிண்ணத்தில் உத்திரணியால் நீர் விடவும்.
கங்காதிஸரிதுத்பூதம் கந்தபுஷ்ப ஸமந்விதம்
பாத்யம் ததாம்யஹம் தேவீ ப்ரஸீத பரமேஸ்வரி
ஸ்ரீ வரலக்ஷ்ம்யை நம: பாத்யம் ஸமர்ப்பயாமி
அர்க்யம்:கிண்ணத்தில் உத்திரணியால் நீர் விடவும்.
கங்காதி ஸமாநீதம் ஸூவர்ண கலசே ஸ்திதம்
க்ரஹாணார்க்யம்மயாதத்தம் புத்ரபெள்த்ரபலப்ரதே
ஸ்ரீ வரலக்ஷ்ம்யை நம: அர்க்யம் ஸமர்ப்பயாமி
மதுபர்க்கம்: தேன் கலந்த தயிர் நிவேதனம்.
ததிக்ஷீர ஸமாயுக்தம் மத்வாஜ்யேன ஸமன்விதம்
மதுபர்க்கம் மாயாதத்தம் ஸ்வீ குருஷ்வ மஹேஸ்வரி
ஸ்ரீ வரலக்ஷ்ம்யை நம: மதுபர்க்கம் ஸமர்ப்பயாமி
பஞ்சாம்ருதம்: புஷ்பத்தில் சிறிது தேன் தோய்த்து பஞ்சாமிர்த நிவேதனம்.
பயக்ஷீர க்ருதைர்மிச்ரம் சர்கராமது ஸம்யுக்தம்
பஞ்சாமிர்த ஸ்னானமிதம் க்ருஹாண பரமேஸ்வரி
ஸ்ரீ வரலக்ஷ்ம்யை நம: பஞ்சாமிர்த ஸ்னானம் ஸமர்ப்பயாமி
ஆசமனியம்:கிண்ணத்தில் உத்திரணியால் நீர் விடவும்.
வைஷ்ணவீ விஷ்ணு ஸம்யுக்தா அஸங்க்யாயுததாரணீ
ஆசமயதாம் தேவபூஜ்யே வரதே அஸூரமர்த்தினி
ஸ்ரீ வரலக்ஷ்ம்யை நம: ஆசமனீயம் ஸமர்ப்பயாமி
வஸ்த்ரம்: ஒரு ப்ளவுஸ் பீஸை அம்மனுக்கு மேல் சார்த்தவும்.
திவ்யாம்பரயுகம் சூக்ஷ்மம் கஞ்சுகம் ச மனோஹரம்
வரலக்ஷ்மி மகாதேவீ க்ருஹாநீதம் மயார்பிதம்
ஸ்ரீ வரலக்ஷ்ம்யை நம: வஸ்த்ரம் சமர்பயாமி
கண்டஸூத்ரம்: புஷ்பம் அக்ஷதை சேர்த்து கருகமணி/பனைஓலை அணிவிக்கவும்
மாங்கல்ய மணி ஸம்யுக்தம் முக்தாஜால சமன்விதம்
தத்தம் மங்கள ஸூத்ரந்தே கிருஹாண ஹரிவல்லவே
ஸ்ரீ வரலக்ஷ்ம்யை நம: கண்ட ஸூத்ரம் ஸமர்ப்பயாமி
ஆபரணங்கள்: புஷ்பம் அக்ஷதை சேர்த்து:
ரத்ன தாடங்க கேயூர ஹாரகங்கண மண்டிதே
பூஷணம்க்ருஹ்யதாம்தேவிநம ஸ்தேவிஷ்ணுவல்லபே
ஸ்ரீ வரலக்ஷ்ம்யை நம: ஆபரணானி ஸமர்ப்பயாமி
சந்தனம் குங்குமம் : கலசத்தில் சந்தன குங்குமம் இடுங்கள்.
கற்பூர சந்தநோபேதம்கஸ்தூரி குங்குமான்விதம்
சர்வகந்தம் க்ருஹானாத்யா சர்வமங்கள தாயினி
ஸ்ரீ வரலக்ஷ்ம்யை நம: கந்தான் தாரயாமி
ஸெளபாக்ய திரவியம்: புஷ்பம் பன்னீர் தெளிக்கவும்.
ஹரித்ரா குங்குமஞ்சைவ ஸிந்தூரம் கஜ்வலான்விதம்
ஸெளபாக்ய த்ரவ்யஸம்யுக்தம்க்ருஹாண பரமேஸ்வரி
ஸ்ரீ வரலக்ஷ்ம்யை நம: ஸெளபாக்ய திரவியம் ஸமர்ப்பயாமி
அக்ஷதை:
சாலீயான் சந்திரவர்ணாம்ச ஸ்னிக்த மௌக்திக ஸன்னிபான்
அக்ஷதான் பிரதிகிருண்ணீஷ்வ பக்தானாம் இஷ்டதாயினி
ஸ்ரீ வரலக்ஷ்ம்யை நம: அக்ஷதான் ஸமர்ப்பயாமி
புஷ்பம்:
மந்தார பாரிஜாதாப்ஜ கேதக்யுத்பட பாடலை,
மருமல்லிக ஜாத்யா திபுஷ்பைத்வாம் பூஜயா ம்யஹம்
ஸ்ரீ வரலக்ஷ்ம்யை நம: புஷ்பமாலாம் ஸமர்ப்பயாமி
அங்க பூஜை
1. ஓம் வரலக்ஷ்மியை நம: பாதௌ பூஜயாமி
2. ஓம் மஹாலக்ஷ்மியை நம: குல்பௌ பூஜயாமி
3. ஓம் இந்திராயை நம: ஜங்கே பூஜயாமி
4. ஓம் சண்டிகாயை நம: ஜானுனீ பூஜயாமி
5. ஓம் க்ஷீராப்தி தனயாயை நம: ஊரும் பூஜயாமி
6. ஓம் பீதாம்பரதாரிண்யை நம: கடிதம் பூஜயாமி
7. ஓம் ஸோமஸோதர்யை நம: குஹ்யம் பூஜயாமி
8. ஓம் லோகமாத்ரே நம: ஜகனம் பூஜயாமி
9. ஓம் விஷ்ணுப்ரியாயை நம: நாபிம் பூஜயாமி
10. ஓம் ஜகத்குக்ஷ்யை நம: உதரம் பூஜயாமி
11. ஓம் விஸ்வரூபிண்யை நம: வக்ஷஸ்தலம் பூஜயாமி
12. ஓம் ஜகத்தாத்ர்யை நம: ஹ்ருதயம் பூஜயாமி
13. ஓம் ஸூஸ்தந்யை நம: ஸ்தநௌ பூஜயாமி
14. ஓம் கஜகாமின்யை நம: பார்ச்வெள பூஜயாமி
15. ஓம் கம்பு கண்ட்யை நம: கண்டம் பூஜயாமி
16. ஓம் லோகஸூந்தர்யை நம: ஸ்கந்தௌ பூஜயாமி
17. ஓம் பத்மஹஸ்தாயை நம: ஹஸ்தான் பூஜயாமி
18. ஓம் பத்மநாப ப்ரியை நம: பாஹூன் பூஜயாமி
19. ஓம் சந்திரவதனாயை நம: முகம் பூஜயாமி
20. ஓம் உத்பலாக்ஷ்யை நம: நேத்ரே பூஜயாமி
21. ஓம் சம்பக நாஸிகாயை நம: நாஸிகாம் பூஜயாமி
22. ஓம் ஹரிப்ரியாயை நம: ச்ரோத்ரே பூஜயாமி
23. ஓம் பிம்போக்ஷ்ட்யை நம: ஒஷ்டௌ பூஜயாமி
24. ஓம் ச்ரியை நம: அதரம் பூஜயாமி
25. ஓம் சஞ்சலாயை நம: ஜீஹவாம் பூஜயாமி
26. ஓம் ஸூகபோலாயை நம: கண்டஸ்தலம் பூஜயாமி
27. ஓம் அக்ஷ்டமீசந்திர பாலையை நம: பாலம் பூஜயாமி
28. ஓம் மந்தஸ்மிதாயை நம: சுமுகம் பூஜயாமி
29. ஓம் நீலகுந்தளாயை நம: அளகான் பூஜயாமி
30. ஓம் கமலவாஸின்யை நம: பிடரம் பூஜயாமி
31. ஓம் பத்மாஸனாயை நம: சிரம் பூஜயாமி
32. ஓம் ஸர்வைஸ்வர்ய சர்வமங்களாயை நம: சர்வாண்யங்கானி பூஜயாமி.
என்று சொல்லி புஷ்பம் அட்சதை ஸமர்ப்பிக்கவும்.
பின், அஷ்டோத்ரசதநாமம் சொல்லி, புஷ்பம் அல்லது குங்கும அர்ச்சனை செய்யவும்
ஸ்ரீ லட்சுமி அஷ்டோத்திர சத நாமாவளி
1. ஓம் ப்ரக்ருத்யை நம:
2. ஓம் விக்ருத்யை நம:
3. ஓம் வித்யாயை நம:
4. ஓம் ஸர்வபூத ஹிதப்ரதாயை நம:
5. ஓம் ச்ரத்தாயை நம:
6. ஓம் விபூத்யை நம:
7. ஓம் ஸுரப்யை நம:
8. ஓம் பரமாத்மிகாயை நம:
9. ஓம் வாசே நம:
10. ஓம் பத்மாலயாயை நம:
11. ஓம் பத்மாயை நம:
12. ஓம் சுசயே நம:
13. ஓம் ஸ்வாஹாயை நம:
14. ஓம் ஸ்வதாயை நம:
15. ஓம் ஸுதாயை நம:
16. ஓம் தன்யாயை நம:
17. ஓம் ஹிரண்மய்யை நம:
18. ஓம் லக்ஷ்ம்யை நம:
19. ஓம் நித்யபுஷ்டாயை நம:
20. ஓம் விபாவர்யை நம:
21. ஓம் அதித்யை நம:
22. ஓம் தித்யை நம:
23. ஓம் தீப்தாயை நம:
24. ஓம் வஸுதாயை நம:
25. ஓம் வஸுதாரிண்யை நம:
26. ஓம் கமலாயை நம:
27. ஓம் காந்தாயை நம:
28. ஓம் காமாக்ஷ்யை நம:
29. ஓம் க்ரோதஸம்பவாயை நம:
30. ஓம் அனுக்ரஹப்ரதாயை நம:
31. ஓம் புத்தயே நம:
32. ஓம் அநகாயை நம:
33. ஓம் ஹரிவல்லபாயை நம:
34. ஓம் அசோகாயை நம:
35. ஓம் அம்ருதாயை நம:
36. ஓம் தீப்தாயை நம:
37. ஓம் லோகசோக விநாசின்யை நம:
38. ஓம் தர்மநிலயாயை நம:
39. ஓம் கருணாயை நம:
40. ஓம் லோகமாத்ரே நம:
41. ஓம் பத்மப்ரியாயை நம:
42. ஓம் பத்மஹஸ்தாயை நம:
43. ஓம் பத்மாக்ஷ்யை நம:
44. ஓம் பத்மஸுந்தர்யை நம:
45. ஓம் பத்மோத்பவாயை நம:
46. ஓம் பத்மமுக்யை நம:
47. ஓம் பத்மநாபப்ரியாயை நம:
48. ஓம் ரமாயை நம:
49. ஓம் பத்மமாலாதராயை நம:
50. ஓம் தேவ்யை நம:
51. ஓம் பத்மின்யை நம:
52. ஓம் பத்மகந்தின்யை நம:
53. ஓம் புண்யகந்தாயை நம:
54. ஓம் ஸுப்ரஸன்னாயை நம:
55. ஓம் ப்ரஸாதாபிமுக்யை நம:
56. ஓம் ப்ரபாயை நம:
57. ஓம் சந்த்ரவதனாயை நம:
58. ஓம் சந்த்ராயை நம:
59. ஓம் சந்த்ரஸஹோதர்யை நம:
60. ஓம் சதுர்ப்புஜாயை நம:
61. ஓம் சந்த்ரரூபாயை நம:
62. ஓம் இந்திராயை நம:
63. ஓம் இந்துசீதளாயை நம:
64. ஓம் ஆஹ்லாத-ஜனன்யை நம:
65. ஓம் புஷ்ட்யை நம:
66. ஓம் சிவாயை நம:
67. ஓம் சிவகர்யை நம:
68. ஓம் ஸத்யை நம:
69. ஓம் விமலாயை நம:
70. ஓம் விச்வஜனன்யை நம:
71. ஓம் துஷ்ட்யை நம:
72. ஓம் தாரித்ர்ய-நாசின்யை நம:
73. ஓம் ப்ரீதிபுஷ்கரிண்யை நம:
74. ஓம் சாந்தாயை நம:
75. ஓம் சுக்லமால்யாம்பராயை நம:
76. ஓம் ஸ்ரியை நம:
77. ஓம் பாஸ்கர்யை நம:
78. ஓம் பில்வநிலயாயை நம:
79. ஓம் வராரோஹாயை நம:
80. ஓம் யசஸ்வின்யை நம:
81. ஓம் வஸுந்தராயை நம:
82. ஓம் உதாராங்காயை நம:
83. ஓம் ஹரிண்யை நம:
84. ஓம் ஹேமமாலின்யை நம:
85. ஓம் தனதான்யகர்யை நம:
86. ஓம் ஸித்தயே நம:
87. ஓம் ஸ்த்ரைண ஸௌம்யாயை நம:
88. ஓம் சுபப்ரதாயை நம:
89. ஓம் ந்ருபவேச்ம கதானந்தாயை நம:
90. ஓம் வரலக்ஷ்ம்யை நம:
91. ஓம் வஸுப்ரதாயை நம:
92. ஓம் சுபாயை நம:
93. ஓம் ஹிரண்யப்ராகாராயை நம:
94. ஓம் ஸமுத்ரதனயாயை நம:
95. ஓம் ஜயாயை நம:
96. ஓம் மங்களாதேவ்யை நம:
97. ஓம் விஷ்ணுவக்ஷஸ்தல ஸ்திதாயை நம:
98. ஓம் விஷ்ணுபத்ன்யை நம:
99. ஓம் ப்ரஸன்னாக்ஷ்யை நம:
100. ஓம் நாராயண ஸமாச்ரிதாயை நம:
101. ஓம் தாரித்ர்ய த்வம்ஸின்யை நம:
102. ஓம் தேவ்யை நம:
103. ஓம் ஸர்வோபத்ரவ-வாரிண்யை நம:
104. ஓம் நவதுர்காயை நம:
105. ஓம் மஹாகால்யை நம:
106. ஓம் ப்ரஹ்மவிஷ்ணு- சிவாத்மிகாயை நம:
107. ஓம் த்ரிகாலஜ்ஞான ஸம்பன்னாயை நம:
108. ஓம் புவனேஸ்வர்யை நம:
ஸ்ரீ லட்சுமி அஷ்டோத்ர சத நாமாவளி சம்பூர்ணம்
உத்தராங்க பூஜை
தூபம்:
தூபம் ததாமி தே ரம்யம் குக்குல்வகுறு சம்யுதம்
க்ருகாணத்வம் மஹாலக்ஷ்மீ பக்தாநாம் அபிஷ்டதாயினீ
ஸ்ரீ வரலக்ஷ்ம்யை நம: தூபம் ஆக்ராபயாமி
தீபம்:
சாஜ்யம் த்ரிவர்த்தி சம்யுக்தம் சர்வாபீஷ்ட பிரதாயினீ
தீபம் க்ருகாண கமலே தேஹிமே சர்வமீப்சிதம்
ஸ்ரீ வரலக்ஷ்ம்யை நம: தீபம் தர்ஷாயாமி
நைவேத்யம்:
பஹுபாக்ஷ்ய சமாயுக்தம் நானாபல சமன்விதம்
நைவேத்யம் க்ருஹ்யதாம் தேவி நாராயண குடும்பினீ
ஸ்ரீ வரலக்ஷ்ம்யை நம: சால்யன்னம் க்ருதகுல பாயசம்
பாக்ஷ்ய விசேஷம், நாளிகேரகண்டம், பலாணி ஏதத்சர்வம் அம்ருதம்
மகாநிவேத்யம் நிவேதயாமி
அர்க்யம்:
உசீரவாசிதம் தோயம் சீதளம் சாஸ்சோதரி
பானாய க்ருஹ்யதாம் தேவி பாராவார தனூபவே
ஸ்ரீ வரலக்ஷ்ம்யை நம: பாநீயம் சமர்பயாமி
தாம்பூலம்:
பூகீபல சமாயுக்தம் நாகவல்லி தளைர்யுதம்
கற்பூர சூர்ண சம்யுக்தம் தாம்பூலம் பிரதிக்ருஹ்யதாம்
ஸ்ரீ வரலக்ஷ்ம்யை நம: தாம்பூலம் சமர்பயாமி
நீராஞ்சனம்:
நீராஜனம் நீரஜாக்ஷி நாராயண விலாசினி
க்ருஹ்யதாம் அர்பிதம் பக்த்யா கருடத்வஜ பாமினி
ஸ்ரீ வரலக்ஷ்ம்யை நம: நீராஜனம் சமர்பயாமி
புஷ்பாஞ்சலிம் க்ருஹாநீதம் புருஷோத்தம வல்லபே
ஸ்ரீ வரலக்ஷ்மி நமஸ்துப்யம் வராம் தேஹி மமாகிலாம்
ஸ்ரீ வரலக்ஷ்ம்யை நம: மந்த்ரபுஷ்பாஞ்சலிம் சமர்பயாமி
ஸ்வர்ணபுஷ்பம் சமர்பயாமி
ப்ரதக்ஷிண மந்த்ரம்:
சர்வ மங்கள லாபாய சர்வ பாபா நிவ்ருத்தயே
ப்ரதக்ஷிணம் கரோம்யத்யா பிரசீட பரமேச்வரீ
ப்ரதக்ஷிண நமஸ்காரான் சமர்பயாமி
பிரார்த்தனை:
நமோஸ்து நாலீக நிபானனாயை
நமோஸ்து துக்தோததி ஜன்மபூம்யை
நமோஸ்து ஸோமாம்ருத ஸோதராயை
நமோஸ்து நாராயண வல்லபாயை:
நமோஸ்து ரத்னாகர சம்பாவாய
ஸ்ரீ வரலக்ஷ்ம்யை நம: ப்ரார்த்தன சமர்பயாமி
ஆயுராரோக்யம் ஐஸ்வர்யம் புத்திர பௌத்ரான் பஷும் தனம்
சத்ருக்ஷயம் மஹாலக்ஷ்மீ ப்ரயச்ச கருணாநிதே
ராஜோபசாரம்:
சத்ரம் சமர்பயாமி
சாமரம் சமர்பயாமி
கீதம் ஸ்ராவயாமி
ந்ருத்தம் தர்சயாமி
வாத்யம் கோஷயாமி
ஆந்தோலிகாம் ஆரோபயாமி
அஸ்வம் ஆரோபயாமி
கஜம் ஆரோபயாமி
ரதம் ஆரோபயாமி
சமஸ்த ராஜோபசார தேவோபசார மந்த்ரோபசரான் சமர்பயாமி
சரடு பூஜை:
ஓம் கமலாயை நம: ப்ரதம க்ரந்திம் பூஜயாமி
ஓம் ரமாயை நம: த்விதீய க்ரந்திம் பூஜயாமி
ஓம் லோகமாத்ரே நம: த்ருதீய க்ரந்திம் பூஜயாமி
ஓம் விஸ்வ ஜனன்யை நம: சதுர்த்த க்ரந்திம் பூஜயாமி
ஓம் மஹாலக்ஷ்ம்யை நம: பஞ்சம க்ரந்திம் பூஜயாமி
ஓம் க்ஷீராப்தி தனயாயை நம: ஷஷ்ட க்ரந்திம் பூஜயாமி
ஓம் விஸ்வ சாக்ஷிஞை நம: சப்தம க்ரந்திம் பூஜயாமி
ஓம் சந்திரா சோதர்யை நம: அஷ்டம க்ரந்திம் பூஜயாமி
ஓம் ஹரிவல்லபாயை நம: நவம க்ரந்திம் பூஜயாமி
வெற்றிலை பாக்கு, வாழைப்பழம் மடியில் வைத்துக் கொண்டு வலது கையில் சரடு கட்டிக் கொள்ளவும்.
சர்வமங்கள மாங்கல்யே சர்வ பாபா பிரணாசினி
தோரகம் பிரதிக்ருஹ்யாமி சுப்ரீத பவஸ் சர்வதா
நவதந்து சமாயுக்தம் கந்த புஷ்ப சமன்விதம்
பத்நீயாம் தக்ஷிணே ஹஸ்தே தோரகம் ஹரிவல்லபே.
அர்க்யப்ரதானம்:
கிண்ணத்தில் பாலை ஒரு உத்தரணி விட்டு, ரெண்டு உத்தரணி தண்ணீர் விட்டு வைத்துக் கொள்ளவும். இடது கையில் கிண்ணத்தை வைத்துக் கொண்டு, வலது கையில் அக்ஷதை, புஷ்பம், சந்தனம் குங்குமம், எடுத்துக் கொண்டு, பாலை வலது கையில் இருக்கும் பொருட்கள் மேல் மூன்று முறை விட்டு "இதம் அர்க்யம், இதம் அர்க்யம், இதம் அர்க்யம்" என்று சொல்லி கலசத்தில் சேர்க்கவும்.
மமோபாத்த சமஸ்த துரிதக்ஷயத்வாரா ஸ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம்
அத்ய க்ருத பூஜபலம் காமயமானா வரலக்ஷ்மீ பூஜாந்தே
க்ஷீரார்க்ய ராதானம் உபாயன தானாச்ச கரிஷ்யே
கோக்ஷீரேனயுதம் தேவி கந்த புஷ்ப சமன்விதம்
அர்க்யம் க்ருஹான வரதே வரலக்ஷ்மீ நமோஸ்துதே
ஸ்ரீ வரலக்ஷ்ம்யை நம: இதம் அர்க்யம், இதம் அர்க்யம், இதம் அர்க்யம்
அனேன அர்க்ய பிரதாநென பகவதி சர்வாத்மிகா வரலக்ஷ்மீ ப்ரீத்யர்த்தம்
க்ஷமா பிரார்த்தனை: புஷ்பம் அக்ஷதை எடுத்துக் கொண்டு:
காயேன வாசா மனஸேந்திரியைர்வா
புத்யாத்மனா வா ப்ரக்ருதே: ஸ்வபாவாத்
கரோமியத் யத்ஸகலம் பரஸ்மை
ஸ்ரீமன் நாராயணாயேதி ஸமர்ப்பயாமி
மந்த்ர ஹீனம் க்ரியாஹீனம் பக்திஹீநம் ஸீரேச்வர
யத்பூஜிதம் மயாதேவ பரிபூர்ணம் தத் அஸ்துதே
த்வமேவ மாதாச த்வமேவ த்வமேவ பந்துஸ்ச ஸகா த்வமேவ
த்வமேவ வித்யா த்ரவிணம் த்வமேவ த்வமேவ ஸர்வம் மம தேவதேவ
ஆவாஹனம் ந ஜானாமி நஜானாமி விஸர்ஜனம்
பூஜாம் சைவ ந ஜானாமி க்ஷம்யதாம் ஸ்ரீ ஸுதர்சனம்
அனையா பூஜயா ஸ்ரீ வரலக்ஷ்மீம் ப்ரீயதாம்
ஓம் தத் சத் ஸ்ரீ ப்ரம்மார்ப்பணமஸ்து
உபாயன தானம்:
பூஜையை நடத்தி வைக்கும் சாஸ்திரிகளுக்கு தகுந்த மரியாதையோடு தாம்பூலம், பிரசாதம், தக்ஷிணை ஆகியவை செய்து தர வேண்டும். ஒரு வேளை சாஸ்திரிகளை அழைக்காமல் நீங்களே பூஜை செய்து கொண்டால், இதை வசதி குறைந்த வயதானவர்களுக்கு மரியாதை செய்து கொடுக்கலாம்.
ஸ்ரீ வரலக்ஷ்மி ஸ்வரூபஸ்ய
ப்ராம்மணஸ்ய இதமாசனம்
ஸகலாராதனை: ஸ்வர்சிதம்
ஹிரண்யகர்ப கர்பஸ்தம் ஹேம பீஜம் விபாவஸோ:
அனந்த புண்ய பலதம் அத: சாந்திம் ப்ரயச்சமே
நமஸ்காரங்கள் செய்யவும்:
இந்திரா ப்ரதிக்ருஹ்நாதி இந்திரா வை ததாதி ச
இந்திரா தாரிகாத்பாவ்யம் இந்திராயை நமோ நம:
இதம் உபாயனம் சதக்ஷிணாகம் சதாம்பூலம் ஸ்ரீ வரலக்ஷ்மீ பூஜாபல
சத்குண்யம் தீர்க்க சௌமாங்கல்ய வாப்திம் புத்திர பௌத்ர அபிவ்ரித்திம்
ஸ்ரீ வரலக்ஷ்மீ ப்ரீதிம் காமயமானா துப்யம் அஹம் சம்ப்ரததே ன மம
புனர்பூஜை:
மறுநாள் காலை புனர்பூஜை செய்ய:
உத்தரணியில் தீர்த்தம் எடுத்து, வலது உள்ளங்கையில் விட்டுக் கொண்டு,
ஓம் அச்சுதாய நம:
ஓம் அனந்தாய நம:
ஓம் கோவிந்தாய நம:
என்று சொல்லி, மூன்றுமுறை உட்கொள்ள வேண்டும். இது ஆசமனம்.
பின் கையில் அட்சதை, புஷ்பம் எடுத்துக் கொண்டு, சங்கல்பம் செய்யவும்.
சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்புஜம்
ப்ரசன்ன வதனம் த்யாயேத் ஸர்வ விக்னோப சாந்தயே
மமோபாத்த ஸமஸ்த துரித க்ஷயத்வாரா ஸ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம்
ஸ்ரீ வரலக்ஷ்மி பிரசாத சித்த்யர்தம் ஸ்ரீ வரலக்ஷ்மீ புன: பூஜாம் கரிஷ்யே
ஸ்ரீ வரலக்ஷ்ம்யை நம: ஆஸனம் சமர்ப்பயாமி (அக்ஷதை போடவும்)
ஸ்ரீ வரலக்ஷ்ம்யை நம: பாத்யம் சமர்ப்பயாமி (உத்தரிணி தீர்த்தம் விடவும்)
ஸ்ரீ வரலக்ஷ்ம்யை நம: அர்க்யம் சமர்ப்பயாமி (உத்தரிணி தீர்த்தம் விடவும்)
ஸ்ரீ வரலக்ஷ்ம்யை நம: மதுபர்க்கம் சமர்ப்பயாமி (உத்தரிணி தீர்த்தம் விடவும்)
ஸ்ரீ வரலக்ஷ்ம்யை நம: ஆசமநீயம் சமர்ப்பயாமி (உத்தரிணி தீர்த்தம் விடவும்)
ஸ்ரீ வரலக்ஷ்ம்யை நம: ஸ்நானாபயாமி (ஸ்நானம் செய்வதாக பாவித்து தீர்த்தம் விடவும்)
ஸ்ரீ வரலக்ஷ்ம்யை நம: ஸ்நானானந்தரம் ஆசமனீயம் சமர்ப்பயாமி (தீர்த்தம் விடவும்)
ஸ்ரீ வரலக்ஷ்ம்யை நம: வஸ்த்ரார்தம் புஷ்பாணி சமர்ப்பயாமி (தீர்த்தம் விடவும்)
ஸ்ரீ வரலக்ஷ்ம்யை நம: ஆபாரணார்த்தம் அக்ஷதான் சமர்ப்பயாமி (அக்ஷதை போடவும்)
ஸ்ரீ வரலக்ஷ்ம்யை நம: உபவீதம் சமர்ப்பயாமி (தீர்த்தம் விடவும்)
ஸ்ரீ வரலக்ஷ்ம்யை நம: திவ்ய பரிமள கந்தான் தாரயாமி (குங்குமம், சந்தனம் அக்ஷதை போடவும்)
ஸ்ரீ வரலக்ஷ்ம்யை நம: அக்ஷதான் சமர்ப்பயாமி (அக்ஷதை போடவும்)
ஸ்ரீ வரலக்ஷ்ம்யை நம: புஷ்பை: பூஜயாமி (புஷ்பத்தை சேர்க்கவும்)
தூபம் தீபம்:
ஸ்ரீ வரலக்ஷ்ம்யை நம: தூபம் ஆக்ராபயாமி
ஸ்ரீ வரலக்ஷ்ம்யை நம: தீபம் சந்தர்ஷயாமி
தாம்பூல பழ நைவேத்யம்
ஸ்ரீ வரலக்ஷ்ம்யை நம: கற்பூர தாம்பூலம் சமர்பயாமி
நீராஜனம்:
நீராஞ்சனம்:
நீராஜனம் நீரஜாக்ஷி நாராயண விலாசினி
க்ருஹ்யதாம் அர்பிதம் பக்த்யா கருடத்வஜ பாமினி
ஸ்ரீ வரலக்ஷ்ம்யை நம: நீராஜனம் சந்தர்ஷயாமி
சர்வ மங்கள மாங்கல்யே சிவே சர்வார்த்த சாதிகே
சரண்யே த்ரயம்பிகே கௌரி நாராயணீ நமோஸ்துதே
காத்தியாயணி மகா மாயே மகா யோகி யதீஷ்வரி
நந்த கோப சுதம் கிருஷ்ணம் பதிம் மே குருதே நமஹ
மந்த்ர புஷ்பம் ஸ்வர்ணபுஷ்பம் சமர்பயாமி
சத்திர சாமராதி சமஸ்தோபசாரான் சமர்பயாமி
கலசத்தை வடக்கே நகர்த்தி:
அஸ்மாத் பிம்பாத் ஸ்ரீ வரலக்ஷ்மீம் யதாஸ்தானம் பிரதிஷ்டாபயாமி
ஷோபானார்த்தே க்ஷேமாய புனராகமனாய ச.
பின் கலசத்தை அரிசி பானையில் வைத்துவிட வேண்டும். இதனால் அன்னபூரணியின் அருள் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
No comments:
Post a Comment