Monday, August 15, 2011

நிராகரிப்பின் வலி மரங்களுக்கும்


ஒரு பறவையின் எச்சத்திலிருந்து விருக்ஷமானது
அந்த அநாதை மரம்


ரோட்டோரத்தில் படர்ந்த அது
இரவில் நிலவின் வியர்வையப் பனித்துளியாக்கி
பகலில் உதிர்க்கிறது

வீடற்றவனுக்கு வீடாகிறது
பறவைகளுக்கும்

பகலில் வழிப்போக்கனுக்கு குடையாகிறது

தன்மேல் எழுதப்பட்ட பெயர்கள், எண்களைப் பார்த்து
தனக்குள் நகைக்கிறது
எவனது காதலிக்கோ வலி சுமக்கிறது

பிறகு யாராலும் சீண்டப்படாத தன் வலியை
இரகசியமாய் பரிமாறிக்கொள்கிறது
வேர்களிடம் யாரும் அறியாமல்..

No comments:

Post a Comment