Wednesday, May 25, 2011

நகைச்சுவை; இரசித்தவை


அரசியல்வாதி (மேடையில்) : விலைவாசி உயர்வு திரும்பக்
குறையும் வரை நான் சாகாவிரதம் இருக்கப் போகிறேன்
என்பதை மக்களே, உங்கள்முன் உறுதியிட்டுக் கூறிக் கொள்கிறேன்!!!

................................................................................................................................................

தொண்டர் 1 : பதவி பெருசா, குடும்பம் பெருசா?

தொண்டர் 2 : பதவியில் இருக்கிற குடும்பம்தான் பெருசு!
...............................................................................................................................................

தளபதி: மன்னா, காளைப் படை ஒன்றை நமது படையில்
சேர்ப்போமா?

மன்னர்: நான்தான் காலையே படையாக வைத்து
இருக்கிறேனே, காளைப் படை என்று எதற்கு தனியாக?
.............................................................................................................................................

தலைவர் : நாங்கள் போனமுறை 500 கோடி ஊழல் செய்தோம்;
இந்த முறை 300 கோடி ஊழல் செய்தோம்...

தொண்டன் 1: தலைவர் என்னப்பா சொல்றாரு?

தொண்டன் 2: இது கொள்ளை விளக்க பொதுக் கூட்டமாம்!
...........................................................................................................................................

அரசன் (செய்தி கொண்டுவந்த புறாவைப் பார்த்து ) : புறாவே,
வா! உன்னை வறுக்க வறுக்க என்று வரவேற்கிறேன்.
..........................................................................................................................................

விமான நிலைய அதிகாரி: சார் நீங்க அளவுக்கு அதிகமாகக்
குடித்திருக்கிறீர்கள். உங்களை விமானத்தில் அனுமதிக்க முடியாது.

பயணி: அப்படின்னா சரக்கு விமானத்திலயாவது ஏத்திக்குங்க சார்!
...........................................................................................................................................

தலைவர் ( மேடையில்) : நாங்கள் ஆட்சிக்கு வந்தால்
வெறும் வாயை மெல்லுபவர்களுக்காக இலவச அவல்
திட்டம் கொண்டு வரப்படும் என்பதை மகிழ்ச்சியுடன்
தெரிவித்து கொள்கிறோம்.
...........................................................................................................................................

--தூங்கும்போது செல்போன் பேசறாமாதிரி கனவு
கண்டேன்டா..

--அப்புறம் என்ன ஆச்சு?

--விடிஞ்சதும் போன்ல பேலன்ஸ் இல்லடா!

.........................................................................................................................................
நண்பன் 1: காலம்பூரா உட்கார்ந்து சாப்பிடுரமாதிரி
வசதி செஞ்சி வச்சிட்டுப் போயிருக்காரு எங்க தாத்தா!

நண்பன் 2: அவ்வளவு சொத்து வசதியா?

நண்பன் 1: இல்லடா, நல்ல ஸ்ட்ராங்கா மர பெஞ்ச் செஞ்சி வச்சிட்டாரு...!
..........................................................................................................................................

சேவகன்: மன்னா, போர் நிறுத்தம் ஆகிவிட்டது...

மன்னன்: கண்கள் பனித்தன! இதயம் இனித்தது!!

ஒருவர்: என்னய்யா இந்த நோட்டீசுல கடைசி வரில
P.T.O.-ன்னு போட்டிருக்கே, என்னய்யா அர்த்தம்?

மற்றவர்: Phaக்கத்தை Thiருப்பும் Oய் !
================================================

ஒருவர்: எனக்கு கல்யாணப் பத்திரிகை தரீங்க,
நீங்க யாருனே எனக்குத் தெரியாதே?

மற்றவர்: நீங்க எல்லா கல்யாணத்திலயும் நல்லா
மொய் வெப்பீங்கன்னு கேள்விப்பட்டேன், அதான்!
================================================

நண்பர் 1 : என் மனைவி பேசியே, என்னை 'வியக்க'
வச்சிடுவாள்!

நண்பர் 2 : என் மனைவி பேசியே, என்னை 'வியர்க்க'
வச்சிடுவாள்!
================================================

நண்பர் 1 : நீ டூ வீலர் லைசன்ஸ் வச்சிக்கிட்டு,
த்ரீ வீலர் ஓட்டுனா தப்புதானே, ஏன் டிராஃபிக்
போலிஸ் ஃபைன் போட்டாருன்னு அவரை
திட்டறே?

நண்பர் 2 : டேய், நான் வச்சிருந்தது ஸ்டெப்னி டயர்.
அத சொல்லி ஃபைன் போட்டாருடா...
================================================

தொண்டர் 1 : தலைவர் மகனோட ப்ளஸ் டூ ரிசல்டைப்
பார்த்துட்டு, தலைவர் சந்தோஷமாயிட்டரே , ஏன்?

தொண்டர் 2 : பாஸாயிட்டு, அரசியலுக்கு வராமல்
படிக்கப் போயிடுவானோன்னு பயந்துக்கிட்டே இருந்தாராம்.

No comments:

Post a Comment